காக்கவைத்துவிட்டேன் என்று நான் வரும்வரை காத்திருந்து
வந்தவுடன் வருகிறேன் என்கிறாயேடி... நில்! நில்!
ஒரு நிமிடம் உன் தடங்களை தடை செய்!
ஒரே ஒரு முறை நம் விழிகள் மோத வழி செய்!
ஒரே ஒரு முறை என் வியர்வை வாசம் முகர்ந்து பார்!
ஒரெ ஒரு முறை என் கரம் பற்றி பார்!
ஒரெ ஒரு முறை என் இதய இயக்கத்திற்கு செவி சாய்த்து பாரடி கண்ணே உனக்கு உன்மை புரியும்...
அவைகளும் உன்னை போலவே பொய்யுரைக்கும் என்று சென்று கொண்டிருக்கிறாயேடி.. நில்! ஒரே ஒரு சொல் கேள்!!!
நான் உன்னை காதலிக்கிறேன்...
20071031
Subscribe to:
Post Comments (Atom)

ennaku tamil ezhutha theriyaadhu... aanalum unna paaratum-nu thonuchu.. Very good kavithais.. Good work.. keep it up........
ReplyDeleteநன்றி...
ReplyDelete