Amazon

20060526

கல்லூரி நாட்கள்


என் வழ்க்கையில் தான் எத்தனை எத்தனை
சுக(ம்)மான சோகங்கள்!

சொல்ல துடிக்கும் மறைந்த மகிழ்வுகள்!

கேட்க கேட்க இனிக்கும் நண்பனின் நக்கல்கள்!

பார்த்து பார்த்து பழகினாலும் புளித்து போகாத புன்னகை முகங்கள்!

திட்டி திட்டி தீர்த்தாலும் தீராத வார்த்தைகள்
தீர்ந்துவிடும் சண்டைககள்!

நீலக் கடல் நிலத்தில் அமிழிந்து போனாலும்
நில்லாதது எங்கள் கேலிகளும் கிண்டல்களும்!

அருகில் அமரும் அவனுக்குத்தான் சோகம்
ஆனால் வருத்தமோ எங்களுக்கு!

சொல்லப்போனால் அது ஒரு அழகிய நிலாக்காலம் தான்!

அன்று அருகில் இருந்தவனை அலட்ச்சியப்படுத்திய நான்
அழுகிறேன் அவனுக்காக இன்று!!!

20060524

மனித மனம்



மனிதன் குரங்கிலிருந்தான் வந்தான்
என்பதற்கு அறிவியல் ஆதாரங்கள் அவசியமில்ளை
ஏனெனில் அவன் மனம் இன்னும் தாவிக்கொண்டுதான் இருக்கிறது...

அன்றும் இன்றும்



படுத்திருக்கையுலும் படித்திருக்கையுலும்
பக்கத்தில் நீ அன்று!

படுத்தாலும் படித்தாலும்
நினைவில் மட்டுமே நீ இன்று!

என் சிறகுகள் சிறகடிப்பதற்கு
வழிகாட்டினாய் அன்று!

என் சிறகுகள் சிறைபடுத்தப்பட்டுல்லன
நீ இல்லாமல் இன்று!

உன்னை என்னிலும் என்னை உன்னிலும்
கண்(டார்கள்)டோம் அன்று!

என்னை மட்டுமாவது காண
காத்துகிடக்கிறேன் இன்று!

நம் நினைவுகளும் நிகழ்வுகளும்
ஒன்று தான் அன்று!

என் நினைவில் நீ உன் நினைவில் நான்
என்று மட்டும் தான் இன்று!

இருப்பினும்!
நீ உயிர் நான் உடல் என்று
பொய் சொல்ல விரும்பவில்லை நான்!
ஏனெனில் உயிரற்ற உடலோ உடலற்ற
உயிராகவோ நாம் வாழ்ந்துகொண்டிறுக்க
வாய்ப்பில்லை! ஆனால்

நம் உணர்வுகளோடு ஒன்றிதான் போயிருந்தோம்
இது பொய் அல்ல நிஜம்!!

மீண்டும் உன் தோள் சாய்வேன் என்ற நம்பிக்கையில் இன்று நான்!

20060516

அவள்

அவள் முகம் என் விழியில்
அவள் இதழ்களின் இசை என் செவிகளில்
அவள் நினைவுகள் என் மனதில்
ஆனால்
அவள் மட்டும் தொைலவில்.

20060331

உன் பெயர்

உன் பெயர்
அகம் ஒன்று நினைத்து புறம் ஒன்று பேச என் உதடுகல் மறுக்கின்றன!!
என் அகத்தினில் அவள் இருப்பதனால் தானோஎன்னையறியாமல் என்னவளின் பெயரையே வாசித்துகொண்டிருக்கின்றதோ!
உன்மை விளங்காமல் உன் நினைவோடு!!!!!!!!!!!!

20060329

என் முதல் கணிணி கவிதை
மன்னிக்கவும் நான் Thamizil தான் எழுத ஆசைபட்டேன்அதனால் தான் ஆங்கிலதில் அச்சிஅடித்துகொண்டிருக்கிறேன்.
எதுஎப்படியாயினும் நன்றிகள் கோடி என் கிறுக்கல்களும் இனிஇங்கே இடம் பெற நல்வழி செய்த நல்லவர்களுக்கு.