Amazon

20100513

காதல்! காதல்!

இத்தனை ஆண்டுகளாய்
பொத்திவைத்த என் கண்ணியம் ஒரு நொடியில்
மரணித்துவிட்டது!

உன் ஒற்றை கண் ஓர
பார்வையில்!

-----------------------
 வரைந்து வைத்த ஒவியம் வாயடைத்து நிற்கிறது...
ஒவியமாய் உன்னைப் பார்த்து..

நீ மட்டும் ஒவியக் கண்காட்சிக்கு சென்றுவிடாதே
ஒவியங்களும் வரிசையில் நிற்கும் உன்னை காண்பதற்கு
உயிரோவியம் என்று!

----------------------

20100428

நானா !

நான் பயணப்படும் பாதையின் கரடுமுரடுகளை
களைவதற்கு வாய்ப்பிருந்தும் என் பாதங்களுக்கு மட்டும்
பாதகைகள் பயன்படுத்தி பயணப்படும் நானா
இந்த சமூகத்தின் தலையெழுத்தை தீர்மாணிக்கப் போகும்
இன்றைய நாளைய இளைஞ்சன்!!!

20100408

அச்சமில்லை! அச்சமில்லை!

என் ஆசிரியையின் அன்பான அதட்டலுக்கு அடிபணிந்து
முதல் முறையாக, கடைசி போட்டியாளனாக
குளிரூட்டப்பட்ட அறைக்குள்ளும் வியர்வை குளியல் முடித்து
பட படக்கும் இதயத்துடன் மேடை ஏறி
மெல்ல மெல்ல ஒப்புவிக்கின்றேன் எனக்கான முதல் கவிதையை

அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே!

20100404

ஒரு காதலனின் ... கடைசிக் கடிதம்



என்னுள் வாழும் காதலிக்கு...

உன் கோபக் கடிதம் கண்டேன்
உன் வார்த்தைகளின் உஸ்ணத்தில் உறைந்து போன‌
எனக்கு காதல் கசந்து போகவில்லை!

எனக்கான உறவுகள் வாழும் சோலைவனத் தோட்டத்தில்
நான் நினைத்ததெல்லாம் நடந்தது உன்னைப் போல் தான் எனக்கும்...
ஆனால் உன்னை தவிர!

உன்னை அழவைக்க அழைக்கவில்லை!
உனக்காக உயிர்கொடுக்கும் உன் சொந்தங்களை
நமக்காக... நாம் அவர்களுக்காக மாறத்தான் அழைக்கிறேன்...

காதலனாக வேண்டுமானால் காதலை மறக்கச்சொல்!
மறக்கிறேன் நம் காதலுக்காக... நான் காதலிக்கும் உனக்காக...
ஏனெனில் நம் காதல் தொடங்கியது விட்டுக்கொடுத்தலில் தான்...
சான்றாக இன்றும் உந்தன் இதயதுடிப்பை நானும் எந்தன் துடிப்பை நீயும் உணர்கிறோம்...

உனக்காக அழும் இதயங்கள் உன்னை அழவிடும் என்றால்...
வருகிறேன் மன்னிக்கவும் பிரிகிறேன்
இதுவரை என்னை கண்ணுக்குள் வைத்து வழி நடத்தியவர்களை விட்டு
நாம் கொண்ட காதலுக்காக‌!

நாளை உன் விருப்பப்படி கல்லறைத் தோட்டத்தில் இருந்து
தொடங்கட்டும் நம் வாழ்க்கைப் பயணம் நம்மை பெற்றவர்களின்
இரண்டு சொட்டு கண்ணீருடன்.

காலை நான்கு மணிக்கு முதல் பேருந்து, மூன்று முப்பதிற்கு வந்துவிடு...

இப்படிக்கு
உன்_________

20100320

காதலில் மட்டும்...

உன் கழுத்துச் சங்கிலியோடு என்னை
கட்டிவைத்து மெ(கொ)ன்றுவிட்டுப்  போகும்
ஒவ்வொரு தருணத்திலும் மெய்மறந்து இரசிக்கின்றேன்
மணற்குவியல்களில் முதல் முறை  தடம் பதித்த‌
குழந்தையைப் போல்!

20100317

என் கிறுக்கிய பக்கங்கள்

உன் இதழ்களின் மௌன‌த்திற்கும், உன் இமைகளின் நடன‌த்திற்கும்
என் விரல்கள் விளக்கமளித்துக் கொண்டே இருக்கிறது
உன் பார்வை படாத என் கிறுக்கிய பக்கங்களில்...

20100315

கல்லூரியின் கடைசி நாள்!

உயிர் பிரியும் தருணத்திலும்
வாழ்த்து பரிமாறல்களோடு
விடை பெற்று கொண்டிருக்கிறேன்
வாழ்க்கையின் யதார்த்தங்களை நோக்கி...

20100309

காணமல் போனவன் பற்றிய அறிவிப்பு...



கடற்கரை மணலுக்குள் கால்கள் புதைய
நட்புபாரட்டும் நட்புகளோடு நடைபயின்ற தருணத்தில்
எதிர்பாரமல் உன் விழி மோதி தொலைந்(த்)த என்னை
கண்டுபிடித்து தருபவளான உனக்கு மட்டும் என் காதலும் பரிசு...

இப்படிக்கு
உனக்குள் தொலைந்(த்)தவன்...

20100216

ஆதலினால்...


உன் ஈரக் கூந்தலில் வாசம் பெற்ற ஓற்றை ரோஜா!
நீ மடிசாயும் தருணங்களில் மட்டும் உலர்ந்து இர(ட்)சிக்கிறது நம் காதலை!!
ஆதலினால் காதல் செய்வோம்!!!

20100202

நட்பு

கைகோர்த்து தோள்சாயும் தருணங்களில்
தொலைந்து போகிறது என் காதலின் வலி(மை)
நட்புக்குள்!

20100128

மரணத்தை நோக்கி !!!

வாழ்க்கை பயணத்தின் முதல் படியில் நின்று என் விருப்பங்களை விதைக்கின்றேன் விருட்சமாக வளர்கிறது என் வெறுமைகள் மட்டுமே!

விளங்கிக்கொள்ளவும் விளக்கிச்சொல்லவும் முடியாமல் அடுத்த படியை நோக்கி தொடர்கிறது
என் பயணம்!!