Amazon

Showing posts with label kavithai. Show all posts
Showing posts with label kavithai. Show all posts

20110626

நான் (எழுதி) கிழித்த பக்கங்களில் இருந்து சில...

திருட்டு 

எப்போதும் தனிமையில் தான் 
களவாடப்படுகிறது  என் கற்பனைகள்
இந்த காகித[டைரியின்] பக்கங்களால்! 


கல்லூரியின் கடைசிநாள் 

உயிர் பிரியும் தருணங்களில் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டு  விடைபெற்றுகொண்டிருக்கிறோம் வாழ்வின் யதார்தங்க்களை நோக்கி...

பல நேரங்களில்!!! 
வார்த்தைகளை வடிப்பதருக்குள் 
விடிந்து விடுகிறது என் கற்பனை இரவு... 
பல நேரங்களில்!!! 

சில  நேரங்களில்!!! 
விடைகளுக்கு வினா தெரியாமல்  விழித்து கொண்டிருகிருக்கும் 
மாணவன் போல்  விழிக்கிறேன் 
என் கவிதைகளுக்கு தலைபிடமுடியாத தருணங்களில்... 


நான் 

என் ஜனனமும்  என் மரணமும் எனக்காக மட்டுமே நிகழ்த்தப்படுகிறது 
என் துனையேதுமின்றி!


20100513

காதல்! காதல்!

இத்தனை ஆண்டுகளாய்
பொத்திவைத்த என் கண்ணியம் ஒரு நொடியில்
மரணித்துவிட்டது!

உன் ஒற்றை கண் ஓர
பார்வையில்!

-----------------------
 வரைந்து வைத்த ஒவியம் வாயடைத்து நிற்கிறது...
ஒவியமாய் உன்னைப் பார்த்து..

நீ மட்டும் ஒவியக் கண்காட்சிக்கு சென்றுவிடாதே
ஒவியங்களும் வரிசையில் நிற்கும் உன்னை காண்பதற்கு
உயிரோவியம் என்று!

----------------------

20100428

நானா !

நான் பயணப்படும் பாதையின் கரடுமுரடுகளை
களைவதற்கு வாய்ப்பிருந்தும் என் பாதங்களுக்கு மட்டும்
பாதகைகள் பயன்படுத்தி பயணப்படும் நானா
இந்த சமூகத்தின் தலையெழுத்தை தீர்மாணிக்கப் போகும்
இன்றைய நாளைய இளைஞ்சன்!!!

20100408

அச்சமில்லை! அச்சமில்லை!

என் ஆசிரியையின் அன்பான அதட்டலுக்கு அடிபணிந்து
முதல் முறையாக, கடைசி போட்டியாளனாக
குளிரூட்டப்பட்ட அறைக்குள்ளும் வியர்வை குளியல் முடித்து
பட படக்கும் இதயத்துடன் மேடை ஏறி
மெல்ல மெல்ல ஒப்புவிக்கின்றேன் எனக்கான முதல் கவிதையை

அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே!

20100320

காதலில் மட்டும்...

உன் கழுத்துச் சங்கிலியோடு என்னை
கட்டிவைத்து மெ(கொ)ன்றுவிட்டுப்  போகும்
ஒவ்வொரு தருணத்திலும் மெய்மறந்து இரசிக்கின்றேன்
மணற்குவியல்களில் முதல் முறை  தடம் பதித்த‌
குழந்தையைப் போல்!

20100317

என் கிறுக்கிய பக்கங்கள்

உன் இதழ்களின் மௌன‌த்திற்கும், உன் இமைகளின் நடன‌த்திற்கும்
என் விரல்கள் விளக்கமளித்துக் கொண்டே இருக்கிறது
உன் பார்வை படாத என் கிறுக்கிய பக்கங்களில்...

20100315

கல்லூரியின் கடைசி நாள்!

உயிர் பிரியும் தருணத்திலும்
வாழ்த்து பரிமாறல்களோடு
விடை பெற்று கொண்டிருக்கிறேன்
வாழ்க்கையின் யதார்த்தங்களை நோக்கி...

20100128

மரணத்தை நோக்கி !!!

வாழ்க்கை பயணத்தின் முதல் படியில் நின்று என் விருப்பங்களை விதைக்கின்றேன் விருட்சமாக வளர்கிறது என் வெறுமைகள் மட்டுமே!

விளங்கிக்கொள்ளவும் விளக்கிச்சொல்லவும் முடியாமல் அடுத்த படியை நோக்கி தொடர்கிறது
என் பயணம்!!